ஆளுநர் விவகாரம்: திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்

ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் திமுகவின் எம்எல்ஏக்கள் ஆளுநரை தாக்கிப் பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக பேனர்களை அடிக்க வேண்டாம் எனவும் திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அண்னா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆளுநர் விவகாரம் குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவித்தார். 

இதைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் ரவி அங்கிருந்து பாதியிலேயே வெளியேறி சென்றார். தேசிய கீதம் பாடப்படும் முன்பே ஆளுநர் ரவி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, சென்னையில் முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com