புத்தகக் காட்சியில் தினமணி அரங்கு: கலாரசிகனின் இந்தவாரம் தொகுப்பு விற்பனை

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பபாசியின் 46-வது புத்தகக் காட்சியில் உள்ள தினமணி அரங்கில் கலாரசிகனின் இந்தவாரம் 6 தொகுதிகள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சியில் தினமணி அரங்கு
புத்தகக் காட்சியில் தினமணி அரங்கு

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பபாசியின் 46-வது புத்தகக் காட்சியில் உள்ள தினமணி அரங்கில் (578, 579) கலாரசிகனின் இந்தவாரம் 6 தொகுதிகள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ் மணியில் கலாரசிகன், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும், தான் படித்த நூல்கள், அவை குறித்த குறிப்பிடும்படியான நிகழ்வுகள் என எழுதி வருகிறார்.

தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்கள், தலைவர்கள், அறிஞர்கள், படைப்பிலக்கியவாதிகள் மற்றும் புதுக்கவிதைகள் என சங்க தமிழக இலக்கியம் முதல் தற்கால நவீன தமிழக இலக்கியம் வரை கலாரசிகன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவானது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை தொகுக்கப்பட்டு 6 புத்தகங்களாக மீனாட்சி பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கலாரசிகனின் இந்த வாரம் 2,216 பக்கங்களுடைய 6 தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.2,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இத்தொகுப்பானது தினமணி அரங்கில் மட்டுமல்லாது, எப்-2, எப்-54, 26, 27, 405 மற்றும் 444, 445 ஆகிய அரங்குகளிலும் கிடைக்கிறது.)

தினமணி அரங்கில் தினமணி சார்பில் வெளியிடப்பட்ட தீபாவளி, ரம்ஜான் சிறப்பு மலர்களும், மகாகவி பாரதி மலர், மாணவர் மலர், மருத்துவ மலர், தேர்தல் மலர் மற்றும் சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட சிறப்பு வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அம்மா, ஜீனியஸ், டி.ஜே.ஜார்ஜ் எழுதிய நூலும் அரங்கில் விற்பனைக்கு உள்ளன. ஆச்சரியமூட்டும் அறிவியல், நலம் தரும் பரிகாரத் தலங்கள், பலன் தரும் பரிகாரத் தலங்கள், இளைஞர்களுக்கான ராமாயணம், கோயங்கா கடிதங்கள், யதி ஆகிய நூல்களும் அரங்கில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com