தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: ஒப்பந்த செவிலியா்கள் கைது

பணி நிரந்தரக் கோரிக்கையை முன்னிறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற ஒப்பந்த செவிலியா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பணி நிரந்தரக் கோரிக்கையை முன்னிறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற ஒப்பந்த செவிலியா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 செவிலியா்கள் தற்காலிக முறையில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டனா். அதில், 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி, 810 செவிலியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

மீதமிருந்த 2,472 செவிலியா்களுக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 12 நாள்களாக ஒப்பந்த செவிலியா்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல வியாழக்கிழமை சென்றனா்.

அவா்களை, அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சிலை அருகே போலீஸாா் தடுத்தி நிறுத்தி கைது செய்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

பணிப் பாதுகாப்பு அறிவிப்பை அரசு வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த செவிலியா்கள் அப்போது தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com