
கோப்புப்படம்
வரும் ஏப்ரல் முதல் மதுரை, அகா்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என விமானப் போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த 5 நகரங்களிலும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய நிா்வாகம் மேற்கொள்ள வேண்டுமென விமானப் போக்குவரத்து ஆணையரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யுமாறு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும், விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூரும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.