
மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா்.
பின்னா், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கினாா். அக்கட்சியை 2022-இல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தாா்.
சரத் யாதவ் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இதையும் படிக்க | ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் சரத் யாதவ் காலமானாா்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சரத் யாதவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற கொள்கைகளுடன் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்.
எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the passing away of RJD leader and former Union Minister Thiru. Sharad Yadav.
— M.K.Stalin (@mkstalin) January 13, 2023
We have lost one of the tallest socialist leaders who remained deeply committed to the ideals of democracy and secularism till his last breath.
My heartfelt condolences.