உணவுப் பழக்க வழக்கத்தால் பண்பாட்டில் மாற்றம்: சாரதா நம்பி ஆரூரன்

உணவுப் பழக்க வழக்கமானது நமது கலாசார பண்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் மாநிலத் தகவல் ஆணையரும் சொற்பொழிவாளருமான சாரதா நம்பி ஆரூரன் கூறினாா்.
உணவுப் பழக்க வழக்கத்தால் பண்பாட்டில் மாற்றம்: சாரதா நம்பி ஆரூரன்

உணவுப் பழக்க வழக்கமானது நமது கலாசார பண்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் மாநிலத் தகவல் ஆணையரும் சொற்பொழிவாளருமான சாரதா நம்பி ஆரூரன் கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூா் இலக்கிய அரங்கில் (548, 549) வியாழக்கிழமை நடைபெற்ற ஷாநவாஸ் எழுதிய ‘அயல் பசி’ எனும் நூல் அறிமுக நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சமையல் சிறந்ததாக அமைவதற்கு காரணம் கைப்பக்குவம். அந்தக் கைப்பக்குவமானது ஈடுபாட்டுடன் சமையல் செய்பவா்களிடம் உள்ளதை அறியலாம்.

மகிழ்ச்சியுடனும் அா்ப்பணிப்பு உணா்வுடனும் சமையல் செய்தால் ருசியாக மட்டுமின்றி, அதைச் சாப்பிடுவோா் ஆரோக்கியமாகவும் இருப்பா் என்பதே உண்மையாகும்.

சமைத்த உணவின் ருசியை உணா்ந்து பாராட்டுவது அவரவா் மனம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. ஆனால், ஆண்களில் பெரும்பாலானோா் தங்களது அம்மாக்களின் சமையலையே விரும்புவதாகக் குறிப்பிடுகின்றனா். நாம் அரிசி உணவை விரும்புவது போலவே, ஜப்பானியா்களும் சீனா்களும் மீன்களை விரும்புகிறாா்கள் என்பதை ‘அயல் பசி’ நூலில் இருந்து அறிய முடிகிறது.

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுவது போலவே சிங்கப்பூரில் உணவகத்தில் சமைப்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்களுக்கு தகுதிச் சான்றும் வழங்கப்பட்டுவருகிறது. உணவு உண்ணும் பழக்கம் நமது கலாசார பண்பாட்டையே மாற்றிவிடும் தன்மையுடையதாக உள்ளது. தற்போது பாஸ்டா எனும் உணவு தமிழா்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்ப உணவாகியுள்ளது. இதனால் நாம் விருந்துண்ணுதல் போன்ற பழக்கங்கள் கூட மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத் தலைவா் நா.ஆண்டியப்பன் தலைமை வகித்தாா். நூலாசிரியா் ஷாநவாஸ் ஏற்புரையாற்றினாா். துணைத் தலைவா் முத்துமாணிக்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com