வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில் முப்பெரும் விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினம், புதிய நூல்கள் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வாழப்பாடி இலக்கியப் பேரவை குழுவினர்.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வாழப்பாடி இலக்கியப் பேரவை குழுவினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினம், புதிய நூல்கள் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, இலக்கியப் பேரவை தலைவர் இல.ராமசாமி  தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

வாழப்பாடி ராஜன் அச்சகத்தில் இருந்து துவங்கிய திருவள்ளுவர் ரத ஊர்வலத்தை வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பி. ஹரிசங்கரி துவக்கி வைத்தார். மாணவர்கள் பெ.சிபி அரசு, சீ.சந்தோஷ் இருவரும் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

ஊர்வலம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடைந்ததும், பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு,  வேளாண்மை ஆத்மா குழு தலைவர் சக்கரவர்த்தி,‌ அரிமா சங்க பட்டயத் தலைவர் எம்.சந்திரசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.கலைஞர்புகழ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, கமல்ராஜா ஆகியோர் இலக்கியப் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து இலக்கியப் பேரவை ‌செயலாளர் சிவ.எம்கோ புதிய நூல்களின் ஆசிரியர்களையும், பொருளாளர் முனிரத்தினம் விருது பெருவோரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

திருவள்ளுவர் தின ஊர்வலத்தில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டு தம்பதி.
திருவள்ளுவர் தின ஊர்வலத்தில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டு தம்பதி.

ஆசிரியர் சுகமணியனின் விலங்குலக விந்தைகள், கவிஞர் பெரியார் மன்னனின் ஊர்வலம், கவிஞர் விச்சு வினோவின் சுதந்திரப் பறவைகள் ஆகிய 3 நூல்களையும், உலகத் தமிழ்க் கழகத்தின் தூயத் தமிழ் மாதாந்திர நாள்காட்டியையும், வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சக்கரவர்த்தி, ஊர் கவுண்டர் மூர்த்தி, தொழிலதிபர் குறிச்சி சண்முகம், நல்லாசிரியர் கோ.முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம்,  ஆகியோர் வெளியிட்டனர்.

இதனையடுத்து, சமூக சேவகர்கள் மனிதநேயப்பண்பாளர் ச.பாண்டுரங்கன், சேவைச் செம்மல் ஆன்மீக நெறிச்செஞ்சுடர் ராம.சிவக்குமார், பொதுநலப்பணிச் செம்மல் இரா.ராஜகோபால் ஆகிய மூவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில், வாழப்பாடி இலக்கியப் பேரவை துணைத்தலைவர் கவிஞர். கணேசன், சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர்,  ஆடிட்டர் குப்பமுத்து, காங்கிரஸ் நிர்வாகி ராஜா,  வாழப்பாடி அரிமா அறக்கட்டளை தலைவர் கே.குபேந்திரன்,  மண்டல தலைவர் பிரபாகரன், வட்டாரத் தலைவர் புஷ்பாஎம்கோ, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் குணாளன், கோபிநாத், சுப்பிரமணி, தில்லையம்பலம், முகம்மது சித்திக், துளி ராஜசேகர், தொமுச கதிரவன், கவுன்சிலர் சத்யா சுரேஷ், அரிமா பார்த்திபன், எல்ஐசி பழனிமுத்து, அருண்குமார், ராமமூர்த்தி உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பெ.பெரியார் மன்னன் நன்றி கூறினார்.

வாழப்பாடி இலக்கியப் பேரவை  திருவள்ளுவர் ரத ஊர்வலத்தில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர் தன்னார்வத்தோடு  கலந்து கொண்டனர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளையும், தமிழ் கலாசாரம் குறித்தும்  வியந்தது போற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com