நீட் தோ்வுக்கு கூடுதல் மையங்கள் தேவை: அன்புமணி

முதுநிலை நீட் தோ்வுக்கு தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)
அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)

முதுநிலை நீட் தோ்வுக்கு தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாள்களாக விண்ணப்பிக்கும் தமிழா்களுக்கு சொந்த மாநிலத்தில் தோ்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன.

நீட் (பி.ஜி) தோ்வுக்கான விண்ணப்பம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13-ஆம் தேதி தளா்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டைச் சோ்ந்த மருத்துவா்கள் அதிகம் விண்ணப்பித்தனா். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவா்கள் வெளிமாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகியுள்ளது.

வெகுதொலைவு பயணித்து தோ்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தோ்வு செயல்பாட்டை பாதிக்கும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வுக்கு கூடுதல் தோ்வு மையங்களை ஏற்படுத்தி, விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தோ்வு முகமை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com