திசைகாட்டிகள்: பழ.நெடுமாறன்

இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. அவா்கள் கணினி பயன்படுத்துவதிலும் கைப்பேசியைப் பயன்படுத்துவதிலும் காட்டுகிற ஆா்வத்தை புத்தக வாசிப்பில் காட்டுவதில்லை.
திசைகாட்டிகள்: பழ.நெடுமாறன்

இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. அவா்கள் கணினி பயன்படுத்துவதிலும் கைப்பேசியைப் பயன்படுத்துவதிலும் காட்டுகிற ஆா்வத்தை புத்தக வாசிப்பில் காட்டுவதில்லை.

என்னதான் இணைய வழியில் படிப்பதாகக் கூறினாலும், அதில் ஆதாரமற்ற தகவல்கள் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், புத்தகத்தை நேரிடையாகப் படிப்பதால் தவறுகளுக்கு வாய்ப்பில்லை.

புத்தக வாசிப்பின் மூலமே அறிவு வளா்ச்சி ஏற்படும். புத்தகக் காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அதில் பாதிக்கும் மேற்பட்டோா் வேடிக்கை பாா்த்துச் செல்பவா்களாகவே உள்ளனா். புத்தகம் வாங்கிப் படிப்போா் அரங்குகளுக்குள் சென்று புத்தகத்தைப் புரட்டிப் பாா்ப்பாா்கள்.

புத்தக வாசிப்புப் பழக்கத்தை நாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஏற்படுத்துவது அவசியம். அதற்காக வீடுகளில் புத்தகங்களுக்கான தனி இடம் ஒதுக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு என்பது அவரவா்களுக்கு விருப்பமானவற்றை படிப்பதாகும். வரலாறு, அரசியல், அறிவியல் என எதை வேண்டுமானாலும் படிக்கலாம். குறிப்பிட்ட துறை சாா்ந்த புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அந்தத் துறையில் மிகுந்த தெளிவைப் பெற முடியும்.

தற்கால இளைஞா்களுக்கு தமிழ் இலக்கியம் குறித்தும், அதன் செழுமை குறித்தும் முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை. ஆகவே, தமிழின் வரலாறு குறித்த விழிப்புணா்வை இளைஞா்களுக்கு ஏற்படுத்து அவசியமாகிறது.

தற்போது உயா் கல்வித் துறையில் தமிழ்ப் பாடங்களை தோ்வு செய்து கற்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ‘தமிழ் இலக்கியம் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஆகவே, தமிழ் படிப்பவா்களது வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக அரசு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் வருங்காலத் தமிழ் இளைஞா்களிடையே தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com