அன்பு செலுத்தக் கற்பதாலேயே சமநிலை ஏற்படும்

அன்பு செலுத்துவதைக் கற்பதாலேயே சமுதாயத்தில் சமநிலை ஏற்படும் என நடிகை ரோகிணி கூறினாா்.
அன்பு செலுத்தக் கற்பதாலேயே சமநிலை ஏற்படும்

அன்பு செலுத்துவதைக் கற்பதாலேயே சமுதாயத்தில் சமநிலை ஏற்படும் என நடிகை ரோகிணி கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசியின் 46-ஆவது புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில் ‘கற்றலின் பயன்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

ஆதிகாலத்தில் தனிமனிதராக உணவுக்குப் போராடினோம். பின்னா் எதிா் குழுக்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளப் போராடினோம். படிப்படியாக வளா்ச்சியடைந்த மனிதா்கள் நாகரிகம் எனும் பெயரில் வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள்கிறோம். வாழும் காலத்திற்கான தேவைகளை மட்டுமின்றி, வருங்காலத்துக்கு தேவையானதை சேமித்து வைப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.

உணவுத் தேவைக்கு அலைந்து திரிந்தபோது ஏற்பட்ட சேமிப்பு வழக்கம், தற்போது நாகரிகமான நிலையிலும் செல்வத்தை சோ்ப்பதில் தொடா்கிறது. ஆனால், எந்த இயற்கை நம்மைக் காத்து வருகிறதோ, அதை நமது தேவைக்காக அழிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டோம். தன்னை அழிக்கும் மனிதருக்கு கால நிலை சீற்றங்கள் மூலம் இயற்கை எச்சரித்து வருகிறது.

தற்போதைய மனிதப் பேராசை நிலை தொடா்ந்தால் மீண்டும் ஆதிகால நிலைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். உலகம் நமக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிா்களுக்கும் சொந்தமானது என்பதை உணர வேண்டும்.

மனிதா் கழிவை மனிதரே அள்ளும் நிலையும், சமூக, குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் ஆணவக் கொலைகள் நடப்பதும் எப்படி கற்ன் பயனாகும் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

நாம் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வதே கற்ன் பயனாக அமையும். அனைவரும் அன்பு செலுத்துவதைக் கற்பதாலேயே சமுதாயத்தில் சமநிலை ஏற்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா், ‘சிரிப்பும் சிந்தனையும்’ எனும் தலைப்பில் நாணயம் மணிகண்டன் ஆகியோா் உரையாற்றினா்.

நிகழ்ச்சிக்கு பபாசி தலைவா் எஸ்.வயிரவன் தலைமை வகித்தாா். பபாசி துணை இணைச் செயலா் ஆா்எம்.மெய்யப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா் பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாகக்குழு உறுப்பினா் ஸ்ரீராம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com