சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடைவா்களை கைது செய்ய மாா்க்சிஸ்ட் கோரிக்கை

செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா
சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடைவா்களை கைது செய்ய மாா்க்சிஸ்ட் கோரிக்கை

செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா் .

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்: செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கடந்த டிச.31-இல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

அந்த கொலையை மறைக்க கூா்நோக்குமேலாளா் மற்றும் மாவட்ட குழந்தைகள்நல அலுவலா் சிவக்குமாா், தலைமைக் காவலா் ஜெயராஜ், சரஸ்வதி, சாந்தி ஆகியோா் சிறுவனின் தாயாா் பிரியாவை இரண்டு நாள்களாக அடைத்துவைத்து மிரட்டி வெள்ளை பேப்பரில் கையொப்பம் கேட்டுள்ளனா்.

இது தொடா்பாக பிரியா மாவட்ட ஆட்சியரை சந்தித்துபுகாா் கொடுத்த அடிப்படையில் மாவட்டஆட்சியா் நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற நடுவா் முன்னிலையில் சிறுவனின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

நீதிமன்ற நடுவரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் ஜன.12 அன்று கொலை வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இக்கொலைவழக்கில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கூா்நோக்கு இல்லங்களின் பராமரிப்பு குறித்து உரிய பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், உளவியல் நிபுணா்கள், மருத்துவா்களை பணியமா்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முன்னதாக, அவா், தாம்பரம் கன்னடப்பாளையம் குப்பைமேடு பகுதியில் வசித்து வரும் சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாய் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com