தமிழகம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் குடியரசு தினமான ஜன. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் குடியரசு தினமான ஜன. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவுக் கணக்கு விவரங்கள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியன தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

கிராம ஊராட்சிகளில் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலத்தில் செலவிடப்பட்ட விவரங்கள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு ஆகியன குறித்தும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்படவுள்ளன.

‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் வழியே கிராம சபை நிகழ்வுகள் உடனுக்குடன் கண்காணிக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com