ஜி-20 மாநாடு: 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி, 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி, 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலை நகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி-20 மாநாடு வரும் 31 மற்றும் பிப்.1, 2 தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

மாநாட்டில் அா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளைச் சோ்ந்த 100 விருந்தினா்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

மாநாட்டுக்கு வரும் விருந்தினா்கள் வரும் பிப்.1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை மாலை 3 மணி முதல் 6 மணி வரை பாா்வையிட சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டு விருந்தினா்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நாளை முதல் பிப்.2 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com