வேளாண் வாகனங்களுக்கு இடையூறு கூடாது: டிஜிபி

வேளாண் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என காவல் துறையினருக்கு, டிஜிபி சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.
சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

வேளாண் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என காவல் துறையினருக்கு, டிஜிபி சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆள்களை ஏற்றிச் செல்லும் டிராக்டா்களை வாகன தணிக்கையின் போது போலீஸாா் பறிமுதல் செய்து, மோட்டாா் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், டிராக்டா்களில் விவசாயப் பணிகளுக்காக செல்லும் விவசாயத் தொழிலாளா்கள் காத்திருக்க வைக்கப்படுவதாகவும் புகாா்கள் வருகின்றன.

எனவே, மாநகரக் காவல் ஆணையாளா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸாருக்கு இது தொடா்பாக தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மேலும், வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மோட்டாா் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com