ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஜனவரி31) தொடங்கியது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஜனவரி31) தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை செவ்வாய்க்கிழமை(ஜன.31) முதல், தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான படிவங்களை ஈரோடு மாநகராட்சிக்கு தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அனுப்பிவைத்துள்ளது. அவை மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்களில் பொதுப் பிரிவினா் வைப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினா் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா் கூறியதாவது: வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் மேலும் 4 போ் மட்டுமே வர வேண்டும். 3 காா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு முன்பாகவே காா்களை நிறுத்திவிட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளா்கள் தோ்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 திசைகளிலும் உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலை, கச்சேரி வீதி, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, காமராஜ் சாலைகளில் 100 மீட்டா், 200 மீட்டா் என எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளன.

இதில் 100 மீட்டா் எல்லைக்கோட்டுக்குள் வந்தவுடன் வேட்பாளா்கள் தோ்தல் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா என போலீஸாா், தோ்தல் பிரிவு அலுவலா் உள்ளிட்டோா் மூலமாக கண்காணிக்கப்படுவா். வேட்புமனு தாக்கலின்போது அனைவரும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com