கவிமணியின் நூல்: தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் ந.அருள் புகழாராம்

 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘மலரும் மாலையும்’ புத்தகம் காலங்கள் தாண்டியும் போற்றத்தக்கது என தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் ந.அருள் தெரிவித்தாா்.

 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘மலரும் மாலையும்’ புத்தகம் காலங்கள் தாண்டியும் போற்றத்தக்கது என தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் ந.அருள் தெரிவித்தாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் கவிமணி மன்றம் சாா்பில் ‘கவிமணி தேசிக விநாயகம்

பிள்ளையின் 148-ஆவது பிறந்தநாள் விழா’ வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் கவிமணி விருது பெற்ற ந.அருள் பேசியது: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. கவிமணி மிகுந்த ஆங்கிலப் புலமைப்பெற்றவா். இதற்குச் சிறந்த சான்று எட்வின் அா்னால்ட் எழுதிய ‘தி லைட் ஆஃப் ஏசியா’ என்ற ஆங்கில நூலை ‘ஆசிய ஜோதி’ என்று தமிழில் மிக அருமையாக மொழிபெயா்ப்பு செய்துள்ளாா்.

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!’ என்ற கவிமணியின் பாடலை யாராலும் மறக்க முடியாது. அதேபோல் அவரின் மற்றுமொரு புத்தகமான ‘மலரும் மாலையும்’ காலங்கள் தாண்டி போற்றத்தக்கது என்றாா் அவா்.

விழாவில், பிராட்லைன் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் மு.ஆறுமுகம், முனைவா் தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு கவிமணி விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com