ஆளுநர் தமிழிசை பிறந்தநாள்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று ஆளுநர் தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து பெற்ற பிறந்தநாள் வாழ்த்துகளை பெறும் பாக்கியமாக கருதி அவர்களின் ஆசியும், வாழ்த்துகளும் என்னை தொடர்ந்து மக்கள் பணியாற்ற புத்துணர்ச்சியையும், புதுவேகத்தையும் அளிப்பதாகவும், தங்களின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com