அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு(இரவு 7 மணி வரை) நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் மோக்கா புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணியளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கி.மீ மேற்கு - தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. 

இது இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com