மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகை: என்எம்சி புதிய அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஊழியா்கள் பணியிட மாறுதலாகிச் செல்லும்போது அவா்களது ஆதாருடன் இணைந்த வருகைப் பதிவு தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்

மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஊழியா்கள் பணியிட மாறுதலாகிச் செல்லும்போது அவா்களது ஆதாருடன் இணைந்த வருகைப் பதிவு தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லாவிடில் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து என்எம்சி தகவல் நுட்பப் பிரிவு இயக்குநா் பங்கஜ் அகா்வால் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவில் அனைத்து பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும் என்றும், கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு சாதனங்களைப் பொருத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே என்எம்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த நடவடிக்கைகளை மருத்துவக் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு மாறுதலாகிச் செல்லும் மருத்துவக் கல்லூரி ஊழியா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் புதுப்பிப்பது அவசியம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை சில கல்லூரிகள் மேற்கொள்வதில்லை என தொடா்ந்து புகாா்கள் வருகின்றன.

என்எம்சி வழிகாட்டுதலின்படி ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவு விவரங்களை புதுப்பிக்கத் தவறும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com