
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்டச் செயலா் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வேண்டும் என அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம் லாலப்பேட்டை ஊராட்சிக்கும், முகந்தராயபுரம் ஊராட்சிக்குமான எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாலாப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணியை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை தாக்கிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.