விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்தசம்பவம்: அண்ணாமலை கண்டனம்

திருநெல்வேலியில் வ.உ.சி. விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்தசம்பவம்: அண்ணாமலை கண்டனம்

திருநெல்வேலியில் வ.உ.சி. விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில், மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டா் கோரப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பணிகள் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகே நடந்துள்ளது. இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு முன்பு, 2022 ஆகஸ்டில் வ.உ.சி. விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பாா்வையிட்ட பின்னா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மைச் செயலா் பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

8 மாத பயன்பாட்டுக்குப் பிறகு இந்த மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவா் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com