என்ன, ஆகஸ்ட் மாதம் சென்னையில் 94% கூடுதல் மழைப் பதிவா?

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: 1901ஆம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 122 ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயல்பான அளவை விட 94 சதவிதம் கூடுதல் மழைப்பொழிவு அதாவது 259.4 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினோ காரணமாக நாட்டில் பருவமழை மிக மோசமாக பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், தென்மேற்குப் பருவமழை சற்று ஓய்வெடுத்து, அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவை குறைவாகக் கொடுத்திருந்த அதே வேளையில், தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வார இறுதியில் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பதிவாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டத்திலும் 239.9 மி.மீ. மழையும் (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ. மழையும் (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ. மழையும் (12 சதவிதம் அதிகம்) பதிவாகியிருக்கிறது. 

வழக்கமாகவே சென்னை உள்பட தமிழகத்தில் செப்டம்பர் மாதம் என்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.  பார்க்கலாம். இந்த செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு எப்படி இருக்கப்போகிறது என்று?
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com