
கோப்புப்படம்
சென்னை: அரசியல்வாதிகள், தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
சென்னையில் மூதாட்டி கிரிஜா வீட்டில் கடந்த 13 ஆண்டுகளாக வாடகை தராமல் குடியிருந்து வந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்தில் காலி செய்யுமாறு காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மூதாட்டி கிரிஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, அரசியல்வாதிகள், தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும்.சுயநலனுக்காக மக்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்த பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிக்க.. பாரதம் என மாற்றினால்.. இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்?
அரசியல்வாதிகளால், தங்களது அதிகாரத்தை வைத்துக்கொண்டு, பொதுமக்கள் மிரட்டப்படுவதையும் பிரச்னை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது என்று நீதிபதி கூறினார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து வீடு காலி செய்யப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.
வழக்கு முடித்துவைத்த நீதிமன்றம், அரசியல்வாதிகளின் சொல், செயல் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...