மாஹே: செப்.25 முதல் கல்வி நிறுவனங்கள் இயங்கும்

நிபா வைரஸ் தாக்கம் குறைந்ததால் மாஹேவில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிபா வைரஸ் தாக்கம் குறைந்ததால் மாஹேவில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து புதுவை பிராந்தியமான மாஹேவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாஹே முதன்மைக் கல்வி அதிகாரி பிறப்பித்திருந்தார். 
இந்த நிலையில் நிபா வைரஸ் தாக்கம் குறைந்ததால் மாஹேவில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பதில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. 
அங்கன்வாடிகள், டியூசன் சென்டர்கள், பயிற்சி வகுப்புகள் இனி நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com