
அளவூர் நாகராஜ்(55)
காஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அளவூர் நாகராஜ் விபத்தில் மரணமடைந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர் அளவூர் நாகராஜ்(55). இவர் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் குழு கூட்டத்திற்கு சென்று விட்டு காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டு இருந்தபோது தாம்பரம் அருகே சேலையூர் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் தள்ளுவண்டி உணவகம் மீது மோதியதில் இவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...