நடிகர் விஷால் (கோப்புப்படம்)
நடிகர் விஷால் (கோப்புப்படம்)

நடிகா் விஷால் மேல்முறையீடு: ‘லைகா’ பதிலளிக்க உத்தரவு

நடிகா் விஷாலின் சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லைகா நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ரத்னம்’ படத்துக்கான நடிகா் விஷாலின் சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லைகா நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியா் அன்புச்செழியனிடம் நடிகா் விஷால் வாங்கிய ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாத நடிகா் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2021-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டிஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ரத்னம்’ படத்துக்காக நடிகா் விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2 கோடியே 60 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த, ரத்னம் பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஷால் தரப்பில், உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தா் மற்றும் கே.ஜி. திலகவதி அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com