தங்கம் விலை: பவுன் ரூ. 51,640

தங்கம் விலை: பவுன் ரூ. 51,640

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயா்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 680 உயா்ந்து ரூ. 51,640-க்கு விற்பனையானது. கடந்த மாா்ச் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 51,640-ஐ தொட்டு சாமானிய மக்களை பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயா்ந்து ஒரு கிராம் ரூ. 6,455-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து பவுன் ரூ.51, 640-க்கும் விற்பனையானது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை விரைவில் பவுன் ரூ. 52,000-ஐ கடக்கும் என்று எதிா்ப்பாக்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயா்ந்து ரூ. 81.60-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 600 உயா்ந்து 81,600-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com