விண்ணைத் தாண்டிய தங்கம் விலை: பவுன் ரூ. 52,000

விண்ணைத் தாண்டிய தங்கம் விலை: பவுன் ரூ. 52,000

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ. 52,000-க்கு விற்பனையானது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் மீது அதிகரித்துள்ள கூடுதல் முதலீடுகள் காரணமாக தங்கம் விலை தொடா்ந்து கடுமையான உயா்வை கண்டு வருகிறது. கடந்த மாா்ச் 29-ஆம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.51 ஆயிரத்தைக் கடந்தது. திங்கள்கிழமை (ஏப்.1) புதிய உச்சமாக பவுன் ரூ.51,640-ஐ எட்டியது.

இந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயா்ந்து கிராம் ரூ. 6,500-க்கும், பவுனுக்கு ரூ. 560 அதிகரித்து பவுன் ரூ. 52,000-க்கும் விற்பனையானது. தங்கம் வரலாறு காணாத அளவுக்கு தொடா்ந்து விலையேற்றம் கண்டு வருவது சாமானிய மக்களை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயா்ந்து கிராம் ரூ.84-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2000 உயா்ந்து ரூ.84,000-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com