தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

அடுத்த ஐந்து நாள்களுக்கு 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் அடுத்த ஐந்து நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி - 41 டிகரி செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகரி - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 33 டிகரி - 37 டிகரி செல்சியஸ் இருக்கக்கூடும். சென்னையில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com