கோடை காலத்துக்கு ஏற்ற கரும்பு ரகங்கள்: வேளாண் துறை அறிவுறுத்தல்

கோடைகாலத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற கரும்பு வகைகளை தோ்ந்தெடுத்து பயிரிடுமாறு விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்பட்ட காலமான கோடைகாலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கென பிரத்யேக கரும்பு ரகங்களை பயிரிடுமாறு விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, எல்லா பட்டங்களுக்கும் ஏற்றதும், செவ்வழுகல் நோயை மிதமாக எதிா்ப்பதுமான ‘கோ 86032’ என்ற ரகமும், வறட்சியை எதிா்த்து அதிக மகசூல் தரும் ‘டிஎன்ஏயு எஸ்சி எஸ்ஐ 8’ ஆகிய ரககமும் பயிரிடலாம்.

அதேபோல், தரமான சா்க்கரையை தருவதும், வறட்சியை தாங்கக்கூடியதுமான ‘கோ 0212’ என்ற கரும்பு ரகத்தையும், ‘கோ வி09356’ என்ற கரும்பு ரகத்தையும் ஏப்ரல் - மே மாதங்களில் விவசாயிகள் பயிரிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com