திராவிட உடன்பிறப்புகளுக்கு ‘உகாதி’ வாழ்த்துகள் -முதல்வர் ஸ்டாலின்
கோப்புப்படம்

திராவிட உடன்பிறப்புகளுக்கு ‘உகாதி’ வாழ்த்துகள் -முதல்வர் ஸ்டாலின்

தெலுங்கு வருடப்பிறப்பு இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு வருடப்பிறப்பு இன்று(ஏப். 9) விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு ‘உகாதி’ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்! எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com