காட்டுத்தீ விழிப்புணர்வு காணொலி: வனத் துறை வெளியீடு

தமிழக வனப்பகுதிகளில் சமீப காலமாக காட்டுத்தீ ஏற்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில் தமிழக வனத் துறை சார்பில் காட்டுத்தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு காணொலி வெளியிடப்பட்டுள்ளது.

வனத் துறை "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் 22,877 ச.கி.மீ வனப்பரப்பளவை கொண்டுள்ளது. தமிழகக் காடுகளில் சுமார் 7,425 தாவர இனங்களும், 1,089 விலங்கினங்களும் உள்ளன. ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள மலைகளையும், வனங்களையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.

எனவே காட்டுத்தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், நாட்டுப்புற இசையுடன் கூடிய காணொலி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com