9 இடங்களில் வெயில் சதம்: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

9 இடங்களில் வெயில் சதம்: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 இடங்களில் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பம் பதிவானது; எனினும், தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.11) முதல் ஏப்.15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): திருப்பத்தூா் - 107.24, சேலம் - 104.1, ஈரோடு - 103.28, பரமத்தி வேலூா் - 103.1, நாமக்கல் , தருமபுரி (தலா) - 101.3, மதுரைநகரம், மதுரை விமானநிலையம் (தலா) - 100.76, திருச்சி - 100.22.

கோடை மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஏப்.11) முதல் ஏப்.15 வரை இடி மின்னலுடன் மிதமான கோடை மழை பொழியும். அதே நேரத்தில், ஏப்.11-இல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி அளவுக்கும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com