மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: ஏப்.15-இல் அம்பாசமுத்திரத்தில் பிரசாரம்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: ஏப்.15-இல் அம்பாசமுத்திரத்தில் பிரசாரம்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். ஏப்.15-ஆம் தேதி அவர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

அரசு நிகழ்ச்சிகள், பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இந்த ஆண்டு, இதுவரை தமிழகத்துக்கு 7 முறை வந்துள்ளார். 8-ஆவது முறையாக மீண்டும் அவர் தமிழகத்துக்கு வருகிறார்.

வரும் திங்கள்கிழமை (ஏப்.15) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

அன்று மாலை 3 மணிக்கு திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com