அடுத்த 4 நாள்களில் வெயில் குறைய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும்
அடுத்த 4 நாள்களில் வெயில் குறைய வாய்ப்பு!
Center-Center-Kochi

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 13 முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த ஐந்து நாள்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com