அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று(ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர்.

மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com