வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

இன்றும், நாளையும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும்.
வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை
ANI

தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

மன்னார் வளைகுடா பகுதிகிளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஏப்ரல் 15, 16 ஆகிய தேதியகளில் தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.15 முதல் 19 வரை ஐந்து நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com