தமிழகத்தில் 59 கோடியைத் தொட்ட ஏா்டெல் 5ஜி வாடிக்கையாளா்கள்

தமிழகத்தில் 59 கோடியைத் தொட்ட ஏா்டெல் 5ஜி வாடிக்கையாளா்கள்

பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையைப் பெறும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 59 கோடியைத் தொட்டுள்ளது.

பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையைப் பெறும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 59 கோடியைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் நிறுவனம் 5ஜி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தி, கடந்த 6 மாதங்களில் அதற்கான வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஏப். 16) நிலவரப்படி, நிறுவனத்தின் 5ஜி சேவையை 59 லட்சம் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திவருகின்றனா்.

அடுத்த தலைமுறை தொலைத்தொடா்பு இணைப்பான 5ஜி சேவையை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக, மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நெட்வொா்க் கட்டமைப்பை விரிவுபடுத்துவதால் பாரதி ஏா்டெல்லின் சேவைகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிகிறது. மேலும், வாடிக்கையாளா்கள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com