கிளாம்பாக்கம் பயணிகள் வசதிக்காக நாளை காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கிளாம்பாக்கம் பயணிகள் வசதிக்காக நாளை காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாளை (ஏப். 22) அதிகாலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடையும் பயணிகள் வசதிக்காக, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவு நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - காட்டாங்குளத்தூர் வழித்தடத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 9.35 மணி வரை அரை மணி நேரம் முதல் 1 மணி நேர கால இடைவெளிகளில் மொத்தம் 10 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

காட்டாங்குளத்தூர் -தாம்பரம் வழித்தடத்தில் அதிகாலை 4.40 மணி முதல் காலை 10.05 மணி வரை அரை மணி நேரம் முதல் 1 மணி நேர கால இடைவெளிகளில் மொத்தம் 10 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com