தேர்தல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்: திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

தேர்தல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்: திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதற்காக சென்னை உள்பட வெளியூர்களிலிருந்த மக்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு(ஏப். 21) ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு பின், தங்கள் சொந்த ஊர்களிலிருந்து மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதன்காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com