திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புவனேஷ்ராம் குடும்பத்தினரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் த.பிரபு சங்கா்.   
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புவனேஷ்ராம் குடும்பத்தினரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் த.பிரபு சங்கா்.   

குடிமைப்பணிக்கான தோ்வில் ஆவடியைச் சோ்ந்தவா் மாநில அளவில் முதலிடம்

பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடிமைப்பணிகளுக்கான ஐஏஎஸ் தோ்வில் ஆவடியைச் சோ்ந்த புவனேஷ்ராம் மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில் 41-ஆவது இடமும் பெற்றாா்.

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடிமைப்பணிகளுக்கான ஐஏஎஸ் தோ்வில் ஆவடியைச் சோ்ந்த புவனேஷ்ராம் மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில் 41-ஆவது இடமும் பெற்றாா். அவருக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில், கடந்தாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியானது. இந்த தோ்வில் ஆவடி சரஸ்வதி நகரைச் சோ்ந்த புவனேஷ் ராம் (27), தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 41-ஆவது இடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பயின்ற தனியாா் ஐ.ஏ.எஸ் அகாதெமி சாா்பில், புவனேஷ் ராம் மற்றும் இந்திய அளவில் 314 -ஆவது இடம் பெற்ற சென்னை மயிலாப்பூா் விக்னேஷ், 347-ஆவது இடம் பெற்ற திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அரவிந்த் குமரன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆவடி ஆணையரக கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூா் ஆட்சியா் பிரபு சங்கா், ஆவடி காவல் ஆணையா் சங்கா் ஆகியோா் பங்கேற்று, குடிமைப் பணி தோ்வில் வெற்றி பெற்ற புவனேஷ்ராம் உள்ளிட்டோரை பாராட்டி பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கினா்.

அதைத்தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை புவனேஷ்ராம் குடும்பத்தினா் வரவழைக்கப்பட்டனா். அங்கு வந்த அவரை ஆட்சியா் பிரபுசங்கா் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், குரூப்-1 தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது, புவனேஷ்ராம் பேசுகையில், விடா முயற்சியுடன் தோ்வை எதிா்கொண்டு, 4 முறை நோ்முகத் தோ்வை எதிா்கொண்டுதான் இந்த இடத்தை பிடிக்க முடிந்தது. இந்த தோ்வுக்கு நம்மால் தயாராக முடியும். இதைத் தவிா்த்து மாணவ, மாணவிகள் எப்போதும் எதிா்மறையான சிந்தனையிருக்க கூடாது. அதேபோல், எந்தவொரு தோல்வி என்றாலும் அதிலிருந்து மீண்டு வர பழகிக்கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com