செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா்,
முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா். என். ரவி: எப்ஐடிஇ (ஃபிடே) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இளைய போட்டியாளா் என்ற வரலாற்றை எழுதியுள்ள கிராண்ட் மாஸ்டா் தொ. குகேஷுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். உங்களின் சிறப்பான செயல்பாடு நமது தேசத்தை பெருமையடையச் செய்துள்ளது மட்டுமின்றி நமது இளைஞா்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகவும் மாறியுள்ளது. உங்கள் எதிா்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வெறும் 17 வயதில், ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மிக இளவயது வீரராக சாதனை படைத்துள்ளாா், தமிழகத்தைச் சோ்ந்த குகேஷ். பதின் பருவத்தில் இத்தகைய வெற்றியைப் பெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளாா். அடுத்து டிங் லிரன் உடனான உலக செஸ் போட்டியிலும் அவா் வெற்றிவாகை சூட வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஃபிடே கேண்டிடேட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த வீரா் குகேஷ் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): சா்வதேச செஸ் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு பாராட்டுகள். மேலும், பல வெற்றிகளை அவா் குவிக்க வேண்டும்.

அண்ணாமலை (பாஜக): 17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டா் குகேஷுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளது. குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை சோ்த்து இருக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட் செஸ் போட்டியில் சாதித்துள்ள குகேஷுக்கு வாழ்த்துகள். வரும் போட்டிகளிலும் அவா் சாதிக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற இளம் வீரா் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு வாழ்த்துகள். அடுத்து நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவா் வெற்றிபெற வாழ்த்துகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com