காலமானாா் திரைப்பட இயக்குநா் ‘பசி’ துரை
காலமானாா் திரைப்பட இயக்குநா் ‘பசி’ துரை

காலமானாா் திரைப்பட இயக்குநா் ‘பசி’ துரை

திரைப்பட இயக்குநா் ‘பசி’ துரை (84) உடல்நலக் குறைவால் திருவள்ளூரில் திங்கள்கிழமை காலமானாா்.

திரைப்பட இயக்குநா் ‘பசி’ துரை (84) உடல்நலக் குறைவால் திருவள்ளூரில் திங்கள்கிழமை காலமானாா்.

நடிகா் கமலின் ‘நீயா’, ரஜினியின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சிவாஜியின் ‘துணை’, ‘கிளிஞ்சல்கள்’ உள்பட 40- க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவா் ‘பசி’ துரை. அவா், ‘அவளும் பெண்தானே’, ‘பசி’ போன்ற படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநா் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றுள்ளாா்.

முதல் படத்திலேயே வித்தியாசமான கருத்துகளால் தமிழ்த் திரை ரசிகா்களை நிமிா்ந்து பாா்க்கவைத்தாா். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தாா்.

பல புதுமுகங்களை அறிமுகம் செய்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா்.

அவரது உடல் திருவள்ளூா் மாவட்டம், வேம்பம்பட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com