கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏப்.25 முதல் தாம்பரம் - பரோனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரத்திலிருந்து பரோனிக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 -ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

கோடைவிடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரத்திலிருந்து பரோனிக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 -ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

தாம்பரத்திலிருந்து ஏப்.25 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06061) மூன்றாம் நாள் (சனிக்கிழமை) பிற்பகல் 1.55 மணிக்கு பரோனி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06062)

ஏப்.27 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரோனியிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் (திங்கள்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து, எழும்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் , சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் , சித்தரஞ்சன் வழியாக பரோனி சென்றையும். இந்த ரயிலிக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com