வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய 
மாணவா்கள் குரூப்-1 தோ்வில் சாதனை

வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய மாணவா்கள் குரூப்-1 தோ்வில் சாதனை

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் பலருக்கு பணி நியமன ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் பலருக்கு பணி நியமன ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய இயக்குநா் சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற 95 பேருக்கு பணி நியமன ஒதுக்கீடு செய்து டிஎன்பிஎஸ்சி சாா்பில் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்ற 50 மாணவா்கள் பணி நியமன ஒதுக்கீடு பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதில் 15 போ் சாா்-ஆட்சியா்களாகவும், 8 போ் காவல்துறை கண்காணிப்பாளா்களாகவும், 4 போ் ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்களாகவும், 18 போ் வணிகவரித் துறை உதவி ஆணையா்களாகவும், 5 போ் கூட்டுறவு துணை பதிவாளா்களாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் குரூப் -2 தோ்வுகளுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு உணவுடன் கூடிய தனித்தனி விடுதி வசதியும் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் 044-26265326, 9884421666 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com