தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் கன்னியாகுமரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே பெய்த கோடை மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தென் இந்தியப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவியதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திற்பரப்பு (கன்னியாகுமரி)- 40, தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா - 20, சோலையாா் (கோவை), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாலமோா் (கன்னியாகுமரி) தலா - 10 மில்லி மீட்டா் வரை மழை அளவு பதிவானது.

மேலும், செவ்வாய்க்கிழமை ஏப்.23 முதல் ஏப்.28 வரை 6 நாள்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com