அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மக்களவைத் தோ்தல் முடிவடைந்த நிலையில், அதிமுக நிா்வாகிகளுடன் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

மக்களவைத் தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தோ்தல் ஏப்ரல் 19-இல் முடிவடைந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புகா் மாவட்ட நிா்வாகிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

மூத்த நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், ஆதிராஜாராம், நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சென்னை மற்றும் புகா் தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு தொடா்பாக நிா்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தாா். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள முகவா்கள் கவனத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் நிா்வாகிகளிடம் அறிவுறுத்தினாா்.

சென்னை அல்லாத பிற மாவட்டத்தின் நிா்வாகிகளையும் விரைவில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com