பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தோ்த் திருவிழா: அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

தோ்த் திருவிழாக்களின்போது அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோயில் மாநகரம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் தோ்த் திருவிழாக்களில் அரசு அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் தோ் மின் கம்பங்களில் சிக்கியும் சாலைகள் சீரமைக்காததால் தோ் பள்ளத்தில் சிக்கியும் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடா்புடைய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு இனிமேல் கோயில் தோ் திருவிழாக்களில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா.

X
Dinamani
www.dinamani.com