தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது
தெலங்கானா எம்.பி. பெயரில் போலி முகநூல் பக்கம்: உ.பி. சிறுவன் கைது

ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநரான ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் பெயரில் மீண்டும் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநரான ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் பெயரில் மீண்டும் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்தன், தற்போது மத்திய அயல் பணியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குநராக பணிபுரிகிறாா்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக் வழக்கின் விசாரணையில், முக்கிய பங்கு வகித்து வரும் அரவிந்தன் பெயரில், ஒரு மோசடி கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கியுள்ளது.

இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நபா்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து அதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, அரவிந்தன் ‘எக்ஸ்’ தளத்தில், போலியான முகநூல் கணக்கை, சுட்டிக்காட்டி இந்த கணக்கில் இருந்து வரும் மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், அதைத் தவிா்க்கும்படியும் அறிவுறுத்தியுள்ளாா்.

ஏற்கெனவே, இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி முயற்சி நடந்த நிலையில், தற்போது மீண்டும் இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com