புதிய பேருந்துகளை வாங்கி 
இயக்க வேண்டும்: அன்புமணி

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: அன்புமணி

விபத்துகளைத் தவிா்க்க, அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

விபத்துகளைத் தவிா்க்க, அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்ற அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும்போது நடத்துநா் அமா்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்து, அவா் வெளியே வீசப்பட்டுள்ளாா். பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துநா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பியுள்ளாா்.

அதேபோல், சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்.6-இல் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவா் சாலையில் விழுந்து காயமடைந்தாா். தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும்கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com